Tuesday, March 10, 2009

Another girl

நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை என் மனம் இப்படி சந்தோஷத்தில் தள்ளாடுமென்று.

என்னவோ ஒரு இனம் புரியாத இன்பம் அவளை நினைக்கையில்.
அவள் தான் என்ன அழகு.
அவளின் எதை , முதலில் விவரிப்பது என்று மனம் போராடுகிறது.
அவளின் சிரிப்பை சொல்வதா இல்லை கண்களை விவரிப்பதா.
கை கோர்த்து கதை பேசும்போது என் கைகள் உணர்ந்த மென்மையையா
அவள் பாடும் அழகையா.
அவள் செல்லமாக கோவிப்பதயா

ஒன்றும் புரியவில்லை.
ஒன்றை பற்றி சொல்ல நினைத்தால் மற்றொன்று வந்து நிற்கிறது
ஆரம்ப காலங்களில் ஒரு சில நேரத்தில் மட்டும் என்னை ஆர்ப்பரித்த இந்த எண்ணம் இப்பொழுது என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.
ஆபீஸ் இல் இருந்தால் கூட நினைவு என்னவோ அவளை பற்றிதான்.
அவளோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே என்ற வைரமுத்துவின் வார்த்தை நினைவுக்கு வருகிறது.

இதை எழுதி கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க நினைத்த என்னை உணர்ந்தவளாய் இன்னும் என் அருகில் வந்தாள்



என் நான்கு வயது குழந்தை .....





Sunday, March 1, 2009

கண்கள்

அறிந்தவை - அறிய வைத்த ஆரம்ப ஆசிரியன்.
அழகென்று என்னை அறிவுக்கு உணர்த்திய அறிவிலி.
வாழ்க்கை போரை சந்திக்க உடல் முன்னிறுத்திய படைத் தளபதி.
மூளை முடிச்சுகளில் முன்னின்ற முடிச்சு.
ஆம் உலகை எதிர்கொள்ள முன்னின்ற முடிச்சு.
மூளைக்கு முப்பரிமான விளக்கச் செய்தி கொடுக்கும் மூத்த ஒற்றன்.
வண்ண உலகம் காட்டும் கருப்பு ஆடி.
எனக்கும் உலகுக்கும் ஆன தொடர்பு.
கனவு - உபயம்....
கர்ப்பனைக்கு வடிவம் கொடுத்த சிற்பி.
தன்னை பார்த்திரா தீர்க்க தரிசி
பிறவி குருடனின் சோகக் கதை.
ஆக்கப்பூர்வ சிந்தனையின் ஆரம்பப் புள்ளி.
உடல் உபாதையை உணர்த்தும் ஊற்று.
நீர் விட்டுக் கணவனிடம் காரியம் சாதிக்கும் காரியவாதி.
சத்தம் இல்லா சங்கேத பாஷை.
காதல் வரக் காமன் எய்த அம்பு.
மஞ்சள் காமாலைக் காட்ட உடன் பிறந்த மருத்துவன்.
இமைத் திரை இட்டுக் காட்டும் நித்திரை.
வெள்ளைச் சமாதானத்திர்க்குள் இருக்கும் கருப்பு எதிர்ப்பு
yei. Jet lag kooda kattudhappa idhu.

எப்பிடி ...... முடிச்சமில்ல .......