நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை என் மனம் இப்படி சந்தோஷத்தில் தள்ளாடுமென்று.
என்னவோ ஒரு இனம் புரியாத இன்பம் அவளை நினைக்கையில்.
அவள் தான் என்ன அழகு.
அவளின் எதை , முதலில் விவரிப்பது என்று மனம் போராடுகிறது.
அவளின் சிரிப்பை சொல்வதா இல்லை கண்களை விவரிப்பதா.
கை கோர்த்து கதை பேசும்போது என் கைகள் உணர்ந்த மென்மையையா
அவள் பாடும் அழகையா.
அவள் செல்லமாக கோவிப்பதயா
ஒன்றும் புரியவில்லை.
ஒன்றை பற்றி சொல்ல நினைத்தால் மற்றொன்று வந்து நிற்கிறது
ஆரம்ப காலங்களில் ஒரு சில நேரத்தில் மட்டும் என்னை ஆர்ப்பரித்த இந்த எண்ணம் இப்பொழுது என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.
ஆபீஸ் இல் இருந்தால் கூட நினைவு என்னவோ அவளை பற்றிதான்.
அவளோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே என்ற வைரமுத்துவின் வார்த்தை நினைவுக்கு வருகிறது.
இதை எழுதி கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க நினைத்த என்னை உணர்ந்தவளாய் இன்னும் என் அருகில் வந்தாள்
என் நான்கு வயது குழந்தை .....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லா இருக்கு ! பொண்ணு கொஞ்சம் விவரம் தெரிஞ்ச உடன படிச்சுட்டு "ஏம்ப்பா, என் கூட ஒரு நாள் கூட ஒழுங்கா டைம் spend பண்ணினது கிடையாது" ப்ளாக்ல எழுத மட்டும் தெரியுதான்னு !
ஆனா அந்த கடைசி லைன் எழுதாமயே இந்த போஸ்ட் முடிச்சு இருந்தா இன்னும் சூப்பர்.
Post a Comment