Saturday, April 30, 2011

அகதிகள் - 2

stationary ஜாக்கிங் மாதிரி , அந்த எட்டு கால் பூச்சிக்கு எட்டு காலும் அசையுது.


ஆனா ஒரு எட்டு கூட நகரல. .. ஒரு வேளை ஓட்டட குச்சில இருக்கற ஒரு நார் பட்டு ஒரு ரெண்டு மூணு கால் பிராக்ச்சர் ஆயிருக்குமோ என்னவோ .....

இல்ல , அப்படி ஒரு யோகா பண்ணாதான், வாய்லேந்து எச்ச வந்து வீடு கட்ட முடியுமோ என்னவோ ... யார் கண்டா ....

------



நான் ஏன் இப்பிடி ஒரு படுகாளிதனத்த பன்நேங்க்ரதுக்கான பின்னணி இதோ....



போன வருஷம் இப்பிடித்தான் எங்க அண்ணன் ஆறு மாசமா ஓட்டட அடிக்காம டிமிக்கி குடுத்துட்டு இருந்தான்... ஒரு நாள் வேற வழி இல்லாம ஒட்டடையும் அடிச்சிட்டான்... அம்மாவுக்கோ ஆஸ்மா... இவன் ஒழுங்கா அடிக்கரனா இல்லையான்னு பாக்க , அம்மா அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவ்ளோ தான்... அப்சர்வ், சூபர்வைஸ் எல்லாம் பண்ணுவேன்னு சொன்ன அம்மா ,,, கடைசீல , அடுத்த ரெண்டு நாளைக்கு ,, அண்டர் டாக்டர் அப்சர்வேஷன் இன் தி "தெருகோடி ஹோச்பிடல்" ...



விஷயம் முத்தி போக ,, ஆறு மாசமா டேபுடேசன்ல இருந்த எங்க அப்பா இங்க வர மாதிரி ஆயி போய்டுச்சு..



அப்பா : ஏன்டா ,, நான் உங்க அம்மா தொந்தரவு இல்லாம நிம்மதி யா இருக்கறது புடிக்கலியா ,,,, அப்பிடின்னு கத்திகிட்டே ஏதோ சாமி வந்த மாதிரி எங்க அண்ணனா போட்டு மொத்து மொத்துன்னு மொத்திபுட்டாறு.





நான் சும்மா இல்லாம , "இப்பிடி ஆறு மாச ஒட்டடைய ஒரே நாள்ல அடிக்காதடா. அம்மாக்கு ஒண்ணுன்னா , அப்பறம் அப்பா டெல்லி லேந்து வந்துடுவாரு ... அப்பறம் தினம் காலைலஅஞ்சு மணிக்கு எழுந்து படிக்கணும் டான்னு சொன்னேன். இவன்தான் கேக்கல."





அப்பறம் தான் புரிஞ்சுது , நான் இப்ப பண்ணது "சும்மா இருந்த புன்னை சொரிஞ்சதுன்னு" ...அப்பா விஜயகாந்த் ஸ்டைல்-ல பல்ல கடிச்சிக்கிட்டு என் பக்கம் வர ,





"ஆஹா.... இப்ப இங்கிட்டா.... ஆகட்டும்ன்னு சொல்லிகிட்டே குனிஞ்சுகிட்டேன்... ஏன்னா,, கோவத்துல அவர் டார்கெட் மிஸ் ஆயி, நம்ப வாழ்க்கை டார்கெட்டே இல்லாம ஆயிட கூடாது பாருங்க...."





எல்லாம் ஓஞ்சு முடிஞ்சப்பறம் , எங்க அண்ணன் என்னை பாத்து " அப்பிடியே கமல் மாதிரி இருக்கடான்னான்"

... : என்ன நக்கலா ?

அண்ணன் : இல்லைட... உண்மையாலுமே , குருதி புனல் கிளைமாக்ஸ் ல கமல் இப்பிடி தான் கமல் இருப்பான்னான்."



அதுக்கப்பறம் ஒரு மூணு மாசம் , அம்மா அண்டர் டாக்டர் அப்சர்வேஷன் ...

நானும் என் அண்ணனும் அண்டர் அப்பாஸ் கான்ஸ்டன்ட் இண்டர்ரோகேசன்....

பின்ன.... படிச்ச பாடத்துல கேள்வி கேட்டா அது க்விஸ்...

இவுரு ,, படிச்சமா இல்லையாங்கரதயே கேள்வியா கேட்டா அது இண்டர்ரோகேசன் இல்லாம .....

கிட்ட திட்ட மூணு மாசம் , தினம் அஞ்சு மணிக்கு எழுந்து படிச்சே ஆகணும். அது வரைக்கும் அஞ்சு மணி ன்ற ஒன்னு காலைல கிடையாதுன்னு நெனைச்சிட்டு இருந்த எனக்கு அந்த சம்பவம் ஒரு பேர் இடியாவே இருந்துச்சு.

இதுல பல நாள் , அஞ்சு மணிக்கு அலாரம் வேச்சுட்டியான்னு , நைட் ஒரு மணி லேந்து , நாலு மணி வரைக்கும் , ஒரு அவர்க்கு ஒரு தடவை , என்னை தூக்கதுலேந்து எழுப்பி கேப்பாரு...

பரவா இல்லியே ... நாலு டு அஞ்சு சும்மா விட்டுடுவாரோன்னு நீங்க நெனைக்கலாம்.

நோ. .. நாலு டு அஞ்சு , paththu நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ....

அந்த கஷ்ட்ட காலம் முடிஞ்சு இப்பதான் திரும்பி ஒரு எட்டு மாசம் வேலைக்காக கோவா போயிருக்காரு...

டெல்லி லேந்து திரும்பி வந்ததுக்கே , நானும் என் அண்ணனும் என்ன பாடு பட்டோம் ங்கறது , எங்களுக்கு தான் தெரியும்.

கோவா-லேந்து வர வெச்சா , ரெண்டு பத்தாதுன்னு, புதுசா ஒரு புள்ளைய தத்து எடுத்து கூட அடிப்பாரு....

அதனால. ஓட்டட தான ... அடிச்சுருவோம்னு , அடிச்சிட்டேன்....

.....











No comments: