Monday, July 7, 2008

எழுத்து

என்ன எழுதுவது என்ற எண்ணம் எழுந்த போது எந்த எண்ணமும்
எழாததால் எழுத்தையே எழுதலாம் என்று எண்ணியதால் வந்த எழத்து.
எழத்து
ஓசையின் வரைபடம்
எண்ணத்தின் இரட்டை பரிமாண விளக்கம்
சிந்தனையை கூடு விட்டு கூடு பாய்ச்சும் ஊடகம்.
பேனா முனை ஆடிய நர்த்தனம்
எழுத்தாணி சென்ற பாதை
மைத்தொட்ட மயிர்பீலிக்கு கைகள் இட்ட கட்டளை
அறிந்தவனுக்கு புரிகின்ற அர்த்தம்
அறியாதவனுக்கு புரியாத ஓவியம்
வெற்று காகிதத்திற்கு ஆணி கொடுத்த அணிகலன்
காது கேளும் ஊமையின் மொழி
காகிதத்தின் விலை மதிப்பின் பின்னணி
எப்படி?

சுய சிந்தனையில் எட்டியது அன்றி
பிற சிந்தனையை வெட்டி ஒட்டியது அல்ல
இத என்கேந்துடா சுட்டுருக்க போற என்று
சிலர் சிரிப்பது காதுக்கு எட்டினாலும்
இதையும் படிச்சிட்டாகய்யா என்று வடிவேலு ஸ்டைல்ல
சொல்லிகிட்டே அடுத்ததையும் எளுதுவோமில்ல ......

No comments: