செயல்பாடு பேனைப் போலாயினும்
சிந்தனை என்னவோ யானையை போல தான ....
பாகன் பாராப் பூகம்பம்
பார் பார்த்த பிரம்மாண்டம்
பராக்ரமம் படைத்த பொறுமைசாலி
அங்குசம் தாண்டாப் பத்தினி
அறைப்பணத்திக்கு ஆசிர்வாதமுமுண்டு
அறண்டால் ஆயிரம் தலையும் கீழுண்டு
பூகம்பத்தை முன் உணரும் அறிவுமுண்டு
பூமிப்பந்தை உதைத்தாடும் பலமுமுண்டு
பயம் அறியா பயங்கரம்
மரம் இழுக்கும் பரிதாபம்
மாமிசமுன்னா மாமிச மலை
மழலையரும் ரசிக்கும் மா மலை
கலர் படத்தில் வரும் பிளாக் & ஒயிட் நீ
சேற்று கலர் பூசும் பிளாக் & ஒயிட் நடிகனும் நீ
மமூத்தின் evolutionary remain நீ
நிற பேதம் இல்லா நிரந்தரம் நீ
ஆம். கண்டம் தாண்டினாலும்
நீ மட்டும் நிறம் மாறா பூ தானே
உன் பொறுமையை சோதிப்பார்கள் உன்
மயிரை பிடுங்கி - மோதிரம் செய்ய
ஆயிரம் கொன்ற பரணிக்கு பல்லக்கு
அதில பாதி கூட kollallayae ஏன்யா
வீரப்பனுக்கு ஆப்பு
தும்பிக்கும் நம்பிக்கை கொடுக்க உன் கையை தும்பிக்கையும் என்பார்
கயவர்கள். காசு கொடுத்து துதி பாட பழக்கியதால் துதிக்கையும் என்பார்.
தும்பிக்கையோ thudhikkaiyyo
பின்னாடி யான உதைக்க வருதுடா ..... தப்பிச்சிடுடா .......
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது நல்லா இருக்குடா சங்கரா
இதுவும் நல்லா இருக்கு
Post a Comment