Monday, May 16, 2011

muranbaadugal

காரில் அமர்ந்த படியே சுலோகம் சொல்கிற ஓட்டுனர்
பரம கடவுள் பக்தர்...

ரோட்டின் இருபுறமும் தேடுவது ... போலிசை...ரெட் சிக்னலில் ...

-------------
தீண்டாமை ஒழிப்பு போராட்டம் அங்கே ...
எதற்கு???
தீண்டாமை தீண்டிவிட்டதாம் .....
-------------
சமுதாய சம நீதி கோரி போராட்டம் ....
போராட்ட முடிவில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
தங்கள் ஜாதியை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மனு...
-------------
பிளாஸ்டிக் எளிதில் அழியாது.
பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்.
காகிதம் உபயோகிப்போம்.
வெப்ப மயமாவதிலிருந்து உலகை காப்போம்...
இது போன்ற அச்சடித்த காகித அட்டைகள்  ( மரங்களின் மரணத்தில்)  தாங்கி சென்ற கூட்டம்.
...

வழிபோக்காளிகளில் ஒருவர் - மழை வர மாதிரி இருக்கே. அட்டை எல்லாம் நெனஞ்சு ஊறிட போகுதுய்யா.
இன்னொருவர் - இல்ல இல்ல. எல்லாம் கரெக்டா லேமினேட் பண்ணி இருக்காங்க. நான் அப்பவே பாத்துட்டேன் ....
-----------
வரி ஏற்றம் ஒரு புறம் ...
இலவசங்கள் மறு புறம்...
--------
இலவச அரிசி ...
வேலையில்லாமல் சம்பளம் ..நூறு நாள் சம்பளத்திட்டம் ...
கேளிக்கைக்கு கலர் டிவி...
தமிழர்கள் பணக்கார பிச்சைக்காரர்கள்...
செயலாக்கம் - மக்கள் சுய மரியாதை இயக்கம்
------

buttham

அது என்ன புத்தத்திற்க்கும் இனப்படுகொலைக்கும் அப்படி ஒரு தொடர்பு.

சமணம்  சார்ந்த அசோகன் கலிங்கம் வென்றான்..
வெட்க்கி தலை குனிந்து மாறினான் புத்த மதத்திற்கு....

புத்தம் சார்ந்த இவனோ ஈழம் வென்றான்... 
திருப்பதி வேறு வந்து சென்றான் ...
எந்த மதத்திற்கு மாறுவானோ?

nivaaranam

இங்கொன்றும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும்  இருந்ததில்லை....
ஆனால் ஒண்டி ஒளியக் குடிசைகளுண்டு
கோழி போல குஞ்சு பொரித்து வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ...

இங்கொன்றும் அறுசுவை உணவளிக்கும் ஆனந்த பவனோ , pizza கார்னெர்-ஒ
இருந்திடவில்லை ....
ஆனால் பிச்சை எடுக்காமல் கூழ் காச்சி உண்டு  வந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ ....

இங்கொன்றும் சந்தனமரமோ ஜவ்வாதுவோ  இருந்திடவில்லை....
ஆனால் ரத்த வாடை இன்றி வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ......

இங்கொன்றும் நித்தமும் பூபாளம் பாடி பொழுது புலர்ந்ததில்லை.
ஆனால் ஒரு நாளும் ஓராயிரம் மக்களின் ஒருமித்த  
ஒப்பாரி கேட்டு விழித்ததில்லையே....
அது பொறுக்கவில்லையோ .....

இங்கொன்றும் பட்டுடுத்தி  யாரும் வாழ்ந்திடவில்லை.
ஆனால் அரைத்துணி இன்றி அம்மணமாய் அலைந்திட்டோர் யாருமில்லை.
அது பொறுக்கவில்லையோ....

இது ஒன்றும் வேங்கை இல்லா, மான்கள் மட்டுமே  வாழும் பூமி அல்ல.
ஆனால் அளவாய் வேங்கைகளும் ஆங்காங்கே கூட்டமாய் மான்களுமாய்
வாழ்ந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ .....

யார் வேண்டி போரிட்டாய் வேந்தே ....
புலியா
இல்லை புலியின் பெயரால் தமிழ் இனமா?

நீரொன்றும் கடுவுள்ளில்லை. அது தெரியும் எமக்கு...
ஆனால் செந்நாய் கூட்டமென்று நினைத்திடவில்லை ...

இனி வாழ்ந்து காட்டிட  வழி இல்லை என்று தெரியும் எமக்கு.
ஆனால் செத்திட மாட்டோம் என்றிருந்தோமே
இப்படி எஞ்சி இருந்த நடை பிணங்களுக்கு ஊடே வல்லூறு விட்டு
வேடிக்கை பார்த்தாயே ....
எங்கள் சாவு கூட நல்ல சாவாக இருந்திடப்பொருக்கவில்லையோ உமக்கு.

இதற்கு பிறகும், நீ இட்ட திசை நோக்கி கூட்டம் கூட்டமாய் நடந்தோமே ...
அங்கொன்றும் சொர்க்கம் இருந்திடாதென்று தெரியும் எமக்கு.
ஆனால் மயானக்காடு வாய் பிளந்து காத்திருக்கும் என்று நினைத்திடவில்லையே...

 
இப்போது  அண்டை நாடுகளிடம் எதற்கு கேட்கிறாய் நிவாரண நிதி ?
வாழ்வாதாரம் பாதித்தவனை வாழ்விக்கத்தானே நிவாரணம்.
மயானக்காடுகளை அழகு படுத்தவல்லவே....


Sunday, May 1, 2011

அகதிகள்- 1

... : பாவம் அம்மா... இருந்துட்டு போகட்டுமே. யாருக்கும் தான் தொந்தரவு குடுக்கறது இல்லியே. அதுங்க , கை , கால் வயித்த பாத்தாலே பாவமா இருக்கு. ஒரு வேளை சோத்துக்கே அல்லாடுதுங்க ... பாவம்.


அம்மா... : அதுக்காக ஊருக்குள்ள அங்க அங்க சாக்கட தண்ணியில லேக் கட்டி விட முடியுமா.

... : கரெக்ட் ... முடியாது தான். ஏதோ வாய கட்டி , வயித்த கட்டி , வீடுன்னு ஒன்ன கட்டி வாழ்துற்றுக்கரவங்க நடுவுல போய் இப்பிடி புல் டோசர் விடலாமா

அம்மா : இந்த சொசியலிச்டிக் viewellam வேண்டாம். என்னை கோபபடுத்த வேண்டாம். ஹ்ம்ம் ... ஹ்ம்ம்.. இப்பவே மூச்சு வாங்கறது ....

திருப்பதி போயிட்டு நாளைக்கு சாயங்காலம் வரதுக்குள்ள , எல்லாம் முடிஞ்சு இருக்கணும். இல்லேன்னா என்ன நடக்கும்க்றது நான் சொல்ல வேண்டாம்னு நெனைக்கறேன்.





.... : தெரியும் அம்மா . நான் பாத்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்க ...

அன்னிக்கு ராத்திரியே மனச கல்லாக்கிகிட்டு , ஒரு வீடு கூட இல்லாம இடிச்சு தர மட்டம் ஆக்கி , எல்லா

பொண்டு போடிசையும் ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டுடேன்.



கஷ்டமா இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல. ஏன்னா இது நான் பண்ணலேன்னா , என் வாழ்க்கை நரகம் ஆயிடும்...



திருப்பதி லேந்து திரும்பி வந்த அம்மாவுக்கு அப்பிடி ஒரு சந்தோஷம்.



சந்தோசத்துல நல்ல சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.



manasukkulla ஒரு ஓரத்துல சோகம் நெருடினாலும் ,,,

சோத்துக்க்கும் சோகத்துக்கும் சொந்தம் கொஞ்சம் கூட இல்லன்னு யாரோ சொன்னது ஞாபகம் வர , துக்கத்த தூக்குல போட்டு சாக அடிச்சிட்டு

டேபிள்-எ போய் சாப்ட ஒக்கந்தேன்..



அம்மா ...: பக்கத்துக்கு வீட்டுல ஓட்டட குச்சி குடுத்து இருந்தேனே. வாங்கிகிட்டியா ?



.... : வாங்காமையா இவ்ளோ ஒட்டடையும் அடிச்சிருக்கேன் ?

ஒனக்கெல்லாம் சொர்ணாம்பாள்-நு பேர் வச்சதுக்கு பதிலா சொர்ணாக்கா-நு பேர் வெச்சு இருக்கலாம்.



அம்மா: ... ஓட்டட தான அடிச்ச. வீட்டயா இடிச்ச ??



... : பேசாத ... வடைய போடுன்னு சொல்லிக்கிட்டே , டேபிள் -எ ஒரு கானர்ல பாத்தா,,,

ஒரு எட்டு கால் பூச்சி ஏற ட்ரை பண்ணி கிட்டு இருந்துது.



ஒரு பக்கம் வீடு இழந்த துக்கத்தில் எட்டு கால் பூச்சி.

இன்னொரு பக்கம், விக்கி வந்த துக்கத்த , வடை போட்டு அடைச்ச நான்.

.....