காரில் அமர்ந்த படியே சுலோகம் சொல்கிற ஓட்டுனர்
பரம கடவுள் பக்தர்...
ரோட்டின் இருபுறமும் தேடுவது ... போலிசை...ரெட் சிக்னலில் ...
-------------
தீண்டாமை ஒழிப்பு போராட்டம் அங்கே ...
எதற்கு???
தீண்டாமை தீண்டிவிட்டதாம் .....
-------------
சமுதாய சம நீதி கோரி போராட்டம் ....
போராட்ட முடிவில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
தங்கள் ஜாதியை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மனு...
-------------
பிளாஸ்டிக் எளிதில் அழியாது.
பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்.
காகிதம் உபயோகிப்போம்.
வெப்ப மயமாவதிலிருந்து உலகை காப்போம்...
இது போன்ற அச்சடித்த காகித அட்டைகள் ( மரங்களின் மரணத்தில்) தாங்கி சென்ற கூட்டம்.
...
வழிபோக்காளிகளில் ஒருவர் - மழை வர மாதிரி இருக்கே. அட்டை எல்லாம் நெனஞ்சு ஊறிட போகுதுய்யா.
இன்னொருவர் - இல்ல இல்ல. எல்லாம் கரெக்டா லேமினேட் பண்ணி இருக்காங்க. நான் அப்பவே பாத்துட்டேன் ....
-----------
வரி ஏற்றம் ஒரு புறம் ...
இலவசங்கள் மறு புறம்...
--------
இலவச அரிசி ...
வேலையில்லாமல் சம்பளம் ..நூறு நாள் சம்பளத்திட்டம் ...
கேளிக்கைக்கு கலர் டிவி...
தமிழர்கள் பணக்கார பிச்சைக்காரர்கள்...
செயலாக்கம் - மக்கள் சுய மரியாதை இயக்கம்
------